tamilnadu

img

இந்தியில் பெயில் ஆன 5 லட்சம் உ.பி. மாணவர்கள்

லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அம்மாநிலத்தவரின் தாய்மொழியாக கூறப்படும் இந்தியில் மட்டும் 5 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.


உத்தரப்பிரதேசத்தில் இந்தி மொழித் தேர்வை மொத்தம் 29 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இவர்களில் 23 லட்சத்து 76 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வாகி உள்ளனர். அதாவது, தாய்மொழி என்ற கூறப்படும் மொழிப்பாடத்திலேயே, உத்தரப்பிரதேசத்தின் 5 லட்சத்து 74 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இந்தி மொழிப்பாடத்தைக் காட்டிலும், கணிதம், அறிவியல் பாடங்களில் அதிகளவிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களில், தேர்வின்போது, மாணவர்கள் காப்பி அடித்துக்கொள்ள அனுமதிக்கப்படுவது சகஜமானது. அப்படியிருந்தும் சுமார் 6 லட்சம் பேர் தாய்மொழியில் தேர்ச்சி பெறவில்லை என்பது, உத்தரப்பிரதேச பாஜக அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 


இதனிடையே, தாய்மொழியிலேயே படிக்க தெரியாத மாணவர்கள் பிற பாடங்களில் எப்படி தேர்ச்சி பெற்றிருப்பார்கள்? என்ற கேள்வி கல்வியாளர்கள் மத்தியிலிருந்து எழுந்துள்ளது.

;